நடத்தையில் சந்தேகம், தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொன்ற கணவன்

0 2838

ஏர்வாடி அருகே மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன் தாமும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் - முத்துலட்சுமி தம்பதி. முத்துலட்சுமியின் நடத்தையில் முருகனுக்கு சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திங்கட்கிழமை இரவும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்ட நிலையில், இரவு முழுவதும் தூங்காமல் ஆத்திரத்தில் இருந்த முருகன், அதிகாலை நேரம் வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த முத்துலட்சுமியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தாமும் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாகவே முருகன் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments