ஆஞ்சநேயர் கோவில் இடிப்பு.. தேவையின்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை-தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை அடுத்த மணிமங்கலத்தில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் தான் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டதாகவும், தேவையின்றி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியிருப்புக்குள் வெள்ளம் புகுவதை தடுக்க, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலும் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு, இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக சிலர் அவதூறு பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கோவில் இடிக்கப்பட்டதை தவறாக சித்தரித்து, உண்மையை மறைத்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2015ஆம் ஆண்டே இந்த கோவில் இடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆக்கிரமித்து கட்டியிருந்ததால் தான் இடித்ததாகவும், ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தின் சுற்று சுவரும் இடிக்கப்படுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments