அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் ; மாவட்ட ஆட்சியர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 17ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது குறித்து மதுரையில் அலங்காநல்லூர் விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இதனை அடுத்து பேட்டியளித்த ஆட்சியர், ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாவதால், ஜல்லிக்கட்டு போட்டியின் தேதி மாற்றப்படுவதாக தெரிவித்தார்.
போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு புதன்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறும் என குறிப்பிட்ட அவர், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு முடிந்த பின்னரும், போட்டி நடைபெறும் நாளிலும் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
Comments