மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

0 2111
மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து வழக்கு

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து, திமுக எம்.பி. தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அணைகள் பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் சட்ட மசோதா, கடந்த 2019-ல் மக்களவையில் நிறைவேறிய நிலையில், சமீபத்தில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி. எஸ்.ராமலிங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், அரசின் கருத்தை கேட்டு பதில் அளிக்க அவகாசம் வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments