சொந்த கிராமத்தில் தங்க மகனை கவுரவப்படுத்த தங்க தபால் பெட்டி
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை கவுரவப்படுத்தும் வகையில், ஹரியானாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில், புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட தபால் பெட்டியை தபால்துறை வைத்துள்ளது.
டோக்கியோவில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, ஒலிம்பிக் தடகளப் பிரிவில் சுதந்திர இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவர் நீரஜ் சோப்ரா.
இவரது வரலாற்று சாதனையை பல ஆண்டுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், பானிபட் அருகேயுள்ள அவரது சொந்த கிராமமான கண்ட்ராவில் இந்த தங்க முலாம் பூசப்பட்ட தபால் பெட்டி நிறுவப்பட்டுள்ளது.
அதில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் பதக்கம் வென்றது குறித்த செய்தி இந்தியில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியானதும் அந்த தபால் பெட்டியின் புகைப்படத்துடன், சமூக வலைத்தளங்களில் நீரஜ் சோப்ராவுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments