பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். தம்மை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ள நிதிஷ் குமார் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பீகாரில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இது ஜனவரி 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கோவிட் கால விதிகளை கறராக கடைபிடிக்கும்படி பொதுமக்களிடம் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிகள் மூடவும் ஆன்லைன் வகுப்புகள் தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மத வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், மால்கள் போன்றவையும் மூடப்பட்டுள்ளன.
Comments