யார், யாருக்கு மருத்துவமனை சிகிச்சை அவசியம் ; புதிய வழிகாட்டல் நெறிகளை வெளியிட்டது மத்திய அரசு
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் யாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய வழிகாட்டல் நெறிகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
லேசான அறிகுறி அல்லது மிகப்பெரிய ஆபத்து இல்லாத நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிலேயே ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று மருந்து உட்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடுமையான இருமல், சளி, தொண்டை வலி, மூச்சுத் திணறல், ருசி மற்றும் வாசனை இழப்பு பாதிப்பு உடையவர்கள் , வெளிநாட்டு பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.உள்நாட்டு பயணிகளுக்கு எந்தவிதப் பரிசோதனைகளும் கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments