புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது - துணைநிலை ஆளுநர்
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக நடைபெற்ற மேலாண்மை குழுவின் கூட்டத்தில் பேசிய அவர், வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Comments