கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்களை ஏற்பாடு செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா தொற்று பாதித்தவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வகையில் கூடுதலாக ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய சூழலில் கொரோனா பாதித்தோரில் 10% பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், இந்நிலை மாறி மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணிக்கவும், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்களை காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை வழங்க பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments