நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோவில் இடிப்பு..
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே வரதராஜபுரத்தில் அடையாறு கால்வாய் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோவில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பதை கண்டறிந்த பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவிலை இடிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இன்று காலை பொக்லைன் இயந்திரம் மூலம் கோவிலை இடிக்க முயன்றனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கோவில் முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அந்த இடத்தின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments