ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - அமைச்சர் மூர்த்தி

0 3366

ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும் ஒரு போட்டியில் பங்கேற்கும் வீரரோ, காளையோ மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துவது குறித்து மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்போர் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இ - சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர்வாசிகளின் வீடுகளுக்கு வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் சோதனைச் சாவடிகள் அமைத்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments