கோவா அமைச்சர் மைக்கேல் ராஜினாமா.. பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு

0 3357
கோவா அமைச்சர் மைக்கேல் ராஜினாமா.. பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு

கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கழிவுகள் மேலாண்மைத்துறை அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ என்பவர், தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகவும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

கோவாவின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கட்டமைத்த பாஜக தற்போது இல்லை என்றும், 2019-ல் அவரது மரணத்திற்கு பின்பு, கட்சியில் அவருக்கு நெருக்கமானவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், மைக்கேல் லோபோ குற்றம்சாட்டியுள்ளார்.

இனி பாஜக சாதாரண மக்களுக்கான கட்சி அல்ல என விமர்சித்துள்ள மைக்கேல் லோபோ, விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 14-ம் தேதி கோவா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவரது விலகல் 6 தொகுதிகளை கொண்ட Bardesh மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments