நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தகவல்
சீன விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது.
அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள கருவி நிலவின் தரை பரப்பில் பாறையில் நிறமாலை பிரதி பலிப்பை படம் பிடித்தது. பின்னர் 1,731 கிராம் எடை கொண்ட பாறை மாதிரிகளுடன் அந்த விண்கலம் பூமிக்கு திரும்பியது. அந்த பாறை மாதிரியை சீனாவை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் போது நிலவின் பாறை படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Comments