கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, 1.26லட்சம் படுக்கைகள் தயார் - சுகாதாரத்துறை செயலர்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஏற்கனவே ஒரு லட்சத்து 26 ஆயிரம் படுக்கைகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 50ஆயிரம் படுக்கைகள் தயாராகி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா அதிகரிப்புக்கு காரணம் ஒமைக்ரான் பரவல் தான் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது எனவும், இதனால் கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் எனவும், முடிந்தவரை கூட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
Comments