குழந்தை திருமணம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0 3074
குழந்தை திருமணத்தின் பாதிப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தை திருமணத்தின் பாதிப்பு குறித்து  மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 3,326 பேருக்கு இளம் வயது திருமணத்தால் கருத்தரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை அங்கு 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டப்பட்டுளது.

9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகள், 2, 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், கண்காணிக்க வேண்டும் எனவும், குழந்தை திருமணம் குறித்து 1098 என்ற எண்ணில் தகவல் அளிப்பதோடு, சிறப்பு கவனம் செலுத்தி teenage pregnancy மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து கிராமம் கிராமமாக துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments