இஸ்ரேலில் 40 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு - இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலில் நிலவி வரும் தற்போதைய கொரோனா அலையில், நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் நஃப்தாலி பென்னட்(Naftali Bennett) தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்ட தரவுகளின் படி இம்முறை சுமார் 20 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் எனவும் முடிந்த வரை ஊரடங்கை தவிர்க்க அனைத்தையும் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 94 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட இஸ்ரேலில், கடந்த வாரம் கொரோனா பாதிப்பு நான்கு மடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
Comments