திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

0 3785

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள், மண்டபங்களில் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அம்மாவட்டம் நான்கு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாத பட்சத்தில் அவர்களை சிகிச்சை மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக சேவா சமிதி மண்டபத்திலும், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்திலும் சுமார் 150 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments