ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ; நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து நாசம்

0 2193
ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து

தென் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாகின.

காக்ஸ் பஜாரின் 16-ஆவது முகாமில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவசரக் கால உதவி பணியாளர்கள் பல நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மியான்மரில் 2017-ஆம் ஆண்டு ராணுவம் முன்னெடுத்த தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments