இத்தாலியில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் சென்னை சேர்ந்த இளம் வீரர் பட்டம்
இத்தாலியில் நடந்த Vergani கோப்பை ஓபன் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 14 வயது இளம் செஸ் வீரர் பரத் சுப்பிரமணியம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
ஓட்டுமொத்த தொடரில் 6 புள்ளி 5 தரவரிசை புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை பிடித்த பரத் சுப்பிரமணியம், கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கான 2 ஆயிரத்து 500 தரவரிசை புள்ளிகளை பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
சென்னையை சேர்ந்த 14 வயதான பரத் சுப்பிரமணியம் இந்தியாவின் 73-வது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் லலித் பாபு, ஒட்டு மொத்தமாக 7 புள்ளிகள் பெற்று Vergani ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Comments