சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4.65 லட்சம் அபராதமாக வசூல்

0 1977
ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.4.65 லட்சம் அபராதமாக வசூல்

சென்னையில் நேற்று ஒருநாளில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

312 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அத்தியாவசிய பணிகள் தவிர்த்து ஊர் சுற்றியவர்களின் 726 வாகனங்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

முக கவசம் அணியாமல் சென்றது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மீறிய 2 ஆயிரத்து 861 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments