மரபணு மாற்றம் கொண்ட டெல்டாகிரான் புதிய வைரஸ் சைப்ரஸ் நாட்டில் கண்டுபிடிப்பு
கொரோனாவின் மரபணு மாற்றம் கொண்ட மற்றொரு புதிய வைரஸ் சைப்ரஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்ட்ரா கிரான் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய வகை கொரோனா , டெல்டா வைரஸ் மற்றும் ஒமைக்ரானின் கலவையாகும். இரண்டும் ஒன்று சேர்ந்த இந்த புதிய வடிவத்தின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஒமைக்ரான் மற்றும் டெல்டாவின் பாதிப்புகள் இதில் இருக்கும் என்று சைப்ரஸ் பல்கலைக்கழகம் நுண் உயிரி மருத்துவத்துறை அறிவித்துள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களில் 25 பேருக்கு இத்தகைய புதிய வைரசின் பாதிப்பு இருக்கிறது.
அவர்கள் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் குறித்த ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன
Comments