திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைப்பு.!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்கத்தேரோட்டம் ரத்து என்றும், அபிஷேகத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments