நாடு முழுவதும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்.!
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு, இதுவரை 151 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறார்களுக்கு கடந்த 3ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மூன்றாவது டோசாக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. நாடு முழுவதும் 5 கோடியே 75 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளத் தகுதி படைத்தவர்கள் மத்திய அரசு தெரிவித்துள்ளது
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அதற்கு முன் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை, சென்னை பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுதொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 5 லட்சத்து 65 ஆயிரம் சுகாதார பணியாளர்கள், 9 லட்சத்து 78 ஆயிரம் முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்கள் உடைய 20 லட்சத்து 30 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments