ஒமைக்ரானை தொடர்ந்து டெல்டா கிரான் என்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் வகைதொகையின்றி பரவி வரும் நிலையில், சைப்ரஸ் நாட்டில் 'டெல்டா கிரான்' என்ற புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் பண்புகளை ஒத்திருப்பதால் இதற்கு 'டெல்டாக்ரான்' என பெயரிடப்பட்டுள்ளதாக சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியர் லியோண்டியோஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை 25 பேர் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இதன் தீவிரத் தன்மை தொடர்பாக இனி வரும் நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பல்வேறு அறிவியல் நிபுணர்கள் இது உண்மையான கொரோனா மாறுபாடாக இருக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்
Comments