12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், போக்சோவில் கைது

0 5269
12ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழ் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

உடுமலை அருகே செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வரும் அசோக்குமார், அதே பள்ளியில் 12 வகுப்பு பயிலும் மாணவிக்கு வாட்ஸ்ஆப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த மாணவியின் பெற்றோர், 1098 என்ற குழந்தைகள் உதவிஎண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments