முழு ஊரடங்கை சாதகமாக்கி இரண்டு மடங்காக கட்டணத்தை உயர்த்தியது ஓலா, ஊபர் நிறுவனங்கள்

0 6292

சென்னையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி  ola, Uber போன்ற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக வெளிமாநிலத்தில் இருந்து ரயில், விமானம் மூலம் வரும் பயணிகள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அதை சாதகமாக்கி ola, Uber நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மருத்துவ காரணத்திற்காக பயணிப்போரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி, வேறு காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளை அழைத்து செல்வதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments