ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் வெள்ளோட்டம் மூன்றாம் முறையாகக் கடலில் விடப்பட்டது
கொச்சியில் கட்டப்பட்ட விமானந் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மூன்றாம் முறையாகக் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
262 மீட்டர் நீளங்கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் மேல்தளத்தில் ஒரே நேரத்தில் 36 சிறிய வகைப் போர்விமானங்களை நிறுத்த முடியும்.
இந்தக் கப்பலின் வெள்ளோட்டம் ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட வெள்ளோட்டம் இன்று தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்டு மாதத்தில் இந்தக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
Comments