ஜன.12ல் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

0 4362
ஜன.12ல் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வரும் 12ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் திறக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவலால் நிகழ்ச்சிகள் காணொலி மூலம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments