திருமண நாளை நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடிய தம்பதி, தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து : திருமண நாளில் எதிர்வீட்டு மாப்பிள்ளை சம்பவம் !
புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளையை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேரை போலிசார் தேடி வருகின்றனர்.
வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த சங்கர் ரமணி தம்பதியினர், அவர்களது திருமண நாளை நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது.
இதனை எதிர் வீட்டில் வசித்து வந்த சதீஷ் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த ரமணியின் தம்பி ராஜா, வீட்டில் இருந்த கத்தியால் சதீஷ்-ஐ சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சதிஷீன் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சதீஷ்க்கு திருமணமாகி 4 மாதங்களே ஆனது குறிப்பிடத்தக்கது.
Comments