நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா உறுதி
3 வாரங்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அங்கு பணியாற்றும் 400 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் 1,409 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள் மரபனு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
Comments