பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி கார்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரீ பகுதிக்கு ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா சென்ற மக்கள், கடும் பனி பொழிவில் சிக்கி திரும்ப முடியாமல் ஸ்தம்பித்து போனதாக கூறப்படுகிறது.
கடும் குளிரில் இருந்து தப்பிக்க கார் கண்ணாடிகளை மூடியதால் மூச்சுத் திணறல் மற்றும் உறை பனி குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கார்களில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பனியில் சிக்கிக் கொண்ட ஆயிரத்து 122 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments