கோவையில், சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் அவரது ஆண் நண்பரின் மாமனார் கைது.!
கோவையில், சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில், அவரது ஆண் நண்பரின் மாமனார் கைது செய்யப்பட்டார். தருமபுரியை சேர்ந்த ராதா என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கணவரின் நண்பரான சந்திரசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்திரசேகர் அவரது குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆத்திரமடைந்த சந்திரசேகரின் மாமனார் இளங்கோவன், மளிகைக் கடைக்கு சென்று வீடு திரும்பிய ராதாவின் முகத்தில், ஆசிட் வீசிவிட்டு தப்பியோடினார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதா அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இளங்கோவனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
Comments