வெளியூர் சென்ற நேரத்தில் 3 குழந்தைகளின் தாய்க்கு வந்த சோதனை.. சொந்த வீட்டை குத்தகைக்கு விட்ட கும்பல்.. மீட்டுத் தரக்கோரி பெண் தர்ணா
நாகை அருகே வெளியூர் சென்ற சமயத்தில் வீட்டை குத்தகைக்கு விட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீட்டின் உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அங்குள்ள ஆண்டோ சிட்டியில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் நந்தினியின் கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே தூத்துக்குடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்ற நந்தினி, வீடு திரும்பிய போது, அவரது வீட்டை பாலமுருகன், சிலம்பரசன் உள்ளிட்டோர், இரு குடும்பங்களுக்கு போலி பத்திரம் தயாரித்து குத்தகைக்கு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தனது குழந்தைகளுடன் நந்தினி வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Comments