சிம்பு இனி டாக்டராம்..! வேல்ஸ் பல்கலைக்கழகம் 11 ந்தேதி வழங்குகிறது..! நொந்து தனிந்தது வீடு..!

0 12500
சிம்பு இனி டாக்டராம்..! வேல்ஸ் பல்கலைகழகம் 11 ந்தேதி வழங்குகிறது..! நொந்து தனிந்தது வீடு..!

38 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் சிம்புவின் கலை உலக சேவையை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக வேல்ஸ் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் படத்தை தயாரித்து வரும் அந்த பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரிகணேஷ் , இந்த டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்..

1984 ஆம் ஆண்டு வெளியான உறவை காத்தகிளி படத்தில் தந்தை டி.ஆரின் துள்ளான ஆட்டத்துக்கு ஏற்ப 6 மாத கைகுழந்தையாக இருந்த போதே தலையை அசைத்து தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன்..! என் தங்கை கல்யாணி படத்தில் சிம்புவின் கையில் கம்பை கொடுத்து வருங்கால தமிழ் சினிமாவுக்கு தெம்பாக ஒரு ஆக்சன் ஹீரோ தயார் என்றார் டி.ஆர்

தொடர்ந்து சம்சார சங்கீதம் படத்தில் சிம்புவை லிட்டில் சூப்பர்ஸ்டார் டைட்டிலுடன் ஜேம்ஸ் பாண்ட் காஸ்டியூமில் சிறுமிகளுடன் ஆடவிட்டு அசத்தினார் டி.ஆர்.தொடர்ந்து எங்க வீட்டு வேலன், சபாஷ் பாபு ஆகிய படங்களில் சிறுவனாக நடித்த சிம்புவை சில ஆண்டுகள் இடைவேளிக்கு பின்னர் 2002 ஆம் ஆண்டில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஆக்சன் நாயகனாக அறிமுகப்படுத்தினார் டி.ஆர்.

விரல் நாயகன் என்ற அடை மொழியுடன் அழைக்கப்பட்ட சிம்புவை , 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படம் பட்டி தொட்டியெல்லாம் காதல் நாயகனாக கொண்டு சேர்ந்தது.எந்த நேரத்தில் சிலம்பரசன் என்ற நல்ல பெயரை சுருக்கி சிம்பு என்று அழைத்தார்களோ அவரை சுற்றும் வம்புகளுக்கும் பஞ்சமில்லாமல் போனது. 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணை தாண்டிவருவாயா படம் சிம்புவுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது

அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் சரியாக போகாததால் ஏற்பட்ட மனக்குழப்பத்தால் பல்வேறு பிரச்சனைகள், தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட்கார்டு என பல்வேறு சோதனையான காலகட்டத்தை தாண்டி , சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு சிம்புவை மீண்டும் வெற்றிப்படிக்கட்டுகளுக்கு நகர்த்தி கொண்டு வந்துள்ளது

தன்னால் அனைத்து மாஸ் ஹீரோக்களை போலவும் நடிக்க இயலும் என்பதை தனது படத்தின் பாடல் காட்சியில் செய்து காட்டியவர் சிம்பு. தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்திருக்காவிட்டாலும், காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு என்று தனக்கு சரியென பட்டதை பொதுவெளியில் சொல்லத்தயங்காதவர் சிம்பு

இந்த நிலையில் சிம்புவின் இத்தனை ஆண்டு கலைசேவையை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது வேல்ஸ் பல்கலைகழகம். வருகின்ற 11 ந்தேதி நடக்கின்ற விழாவில் இந்த பட்டத்தை வழங்குகின்றனர்.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments