ATMல் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ATM கார்டை மாற்றி ஏமாற்றிய நபர் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ATMல் பணம் எடுக்க தெரியாத நர்மதா என்ற பெண்ணிடம் உதவி செய்வது போல அவரது கார்டை போலி ATM கார்டுடன் மாற்றி, லாவகமாக ஏமாற்றிய CCTV காட்சிகள் வெளியாகின.
திட்டக்குடி காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு, விசாரணையின் போதுதான் ATMல் தனக்கு உதவி செய்தவர் அரியலூரை சேர்ந்த சுந்திரராஜ் என்பதும், அந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல ATM கார்டை மாற்றியதும் அம்பலமானது. அவரை கைது செய்த போலீசார் திருடிய 13ஆயிரம் பரிமுதல் செய்தனர்.
Comments