தடுப்பூசி போடாதவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது - பிலிப்பைன்ஸ் அதிபர்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றித்திரிந்தால் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே (Rodrigo Duterte) எச்சரித்துள்ளார்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத வகையில், தினசரி கொரோனா பாதிப்பு கடந்த வியாழக்கிழமை 17 ஆயிரத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
Comments