ஒரே ஆண்டில் 107 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரியது ஐ.ஐ.டி கான்பூர்
ஐ.ஐ.டி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே ஆண்டில் கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களின் 107 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 76 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரிய அவர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் ஆராய்ச்சிகளை மேலும் தீவிரப்படுத்தினர்.
அதன் விளைவாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச், நாசி துவாரத்தில் பொருத்தப்படும் வைரஸ் தடுப்பு filter, நவீன ஆக்சிஜன் செறிவூட்டி, மண்ணின் மாசளவை பரிசோதிக்கும் கருவி என 107 புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினர்.
கொரோனா உள்ளிட்ட சுவாசத் தொற்றுகளுக்கான நேசல் ஸ்பிரே மற்றும் மறுமுறை பயன்படுத்தக்கூடிய nano-fiber முகக்கவசம் போன்றவை இவற்றுள் முக்கிய கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன.
Comments