கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் மாயமான நிலையில், அவரை கண்டறிந்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்த சுகாதாரத்துறையினர்

0 2811

சென்னை திருமுல்லைவாயிலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் மாயமான நிலையில், சுகாதாரத்துறையினர் கண்டறிந்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

திருமுல்லைவாயில், சரவணா நகரை சேர்ந்த 20 வயதான பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், உடல்நலக்குறைவால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியதை அடுத்து அவர் உடனடியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென அவர் மருத்துவமனையில் இருந்து மாயமானார். கொரோன உறுதியான அச்சத்தில் அவர் வீட்டிற்கு சென்றது தெரியவந்த நிலையில், சுகாதாரப்பணியாளர்கள் அப்பெண்ணை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments