பதிவுபெற்ற பட்டியலில் மீண்டும் இடம்பெற்றது அன்னை தெரசாவின் 'மிஷனரீஸ் ஆப் சாரிட்டி '
அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்புக்கு வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்கான பதிவுச் சான்றை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியுதவி பெற வேண்டுமெனில், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குபடுத்தும் சட்டப்படி தேவைப்படும் விவரங்களை ஆண்டுதோறும் அளித்து உள்துறை அமைச்சகத்தில் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு உரிய விவரங்களை வழங்கிப் புதுப்பிக்காததால் ஆறாயிரம் நிறுவனங்களின் பதிவை நீக்கியதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் 16,908 அரசு சாரா அமைப்புகள் பதிவு பெற்றுள்ளதாக நேற்றுத் தெரிவித்துள்ளது. அதில் மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Comments