சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் - தெற்கு ரயில்வே

0 4581

ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வழிகாட்டுதலின்படி இரண்டு தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஜனவரி 10 முதல் 31 வரை பயணச்சீட்டு, சீசன் டிக்கெட் பெற உரிய அடையாளச் சான்றுடன் இரண்டாம் தவணைத் தடுப்பூசி போட்ட சான்றையும் பயணிகள் வழங்க வேண்டும். ஏற்கெனவே சீசன் டிக்கெட் வைத்திருப்போர், தக்க அடையாளச் சான்றுடன், இரண்டாவது தவணைத் தடுப்பூசி போட்ட சான்றை வைத்திருந்து, பயணச்சீட்டு ஆய்வாளர் கேட்கும்போது காட்ட வேண்டும். யுடிஎஸ் ஆன் மொபைல் செயலி செயல்படாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments