சென்னை- செங்கோட்டை ரயில் என்ஜினில் சிக்கி மின்சார வயர் அறுந்து விழுந்ததால் பதற்றம்

0 4342

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தண்டவாளத்தில் மின் வயர்கள் அறுந்து கிடந்ததால், சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் ரயில் பாதைகளை மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  அருப்புக்கோட்டை பகுதியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், தொட்டியாங்குளத்தில் செல்லும் மின் வயர்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் வயர்கள் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் வயர்கள் மாட்டிக்கொண்டன.

இதனால் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் வயரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. திருட்டு வேலைக்காக வயர்களை வெட்டினார்களா அல்லது, சதி செயலுக்கு திட்டமாக என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments