சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம்... தலைமறைவாக இருந்த ஆலையின் பெண் உரிமையாளர் கைது
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆலையின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மஞ்சள் ஓடைப்பட்டியில், கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய போலீசார், ஆலை உரிமையாளர் பூமாரி உள்ளிட்ட 5 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பட்டாசு ஆலை பெண் உரிமையாளர் பூமாரியை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Comments