சீனாவில் அடுத்தடுத்து 4 முறை ஏற்பட்ட நில நடுக்கம்... ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவு
சீனாவின் Qinghai மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை ஏற்பட்ட நில நடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கின.
மாகாண தலைநகரான Xining-ல் இருந்து 136 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 9 ஆக பதிவானதாக சீன நில அதிர்வு ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. அண்டை மாகாணங்களிலும் அதிர்வு உணரப்பட்டது.
வீடுகளை விட்டு மக்கள் வெளியேறியனர். திடீரென பேரிடர் சூழல் ஏற்பட்டால் சமாளிக்க 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 150-க்கும் மேற்பட்ட மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பு ஏதேனும் நிகழ்ந்ததா என தகவல் தெரிவிக்கவில்லை.
Comments