ஒமைக்ரான் பரவி வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் போட முன்பதிவு தேவையில்லை - மத்திய சுகாதார அமைச்சகம்
ஒமைக்ரான் பரவி வரும் நிலையில்பூஸ்டர் டோஸ் போட்டு கொள்பவர்கள் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை முதல் ஆன்லைன் வழியான முன்பதிவு வசதி தொடங்குகிறது.
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந் நிலையில், கூடுதலாக பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் போடுவது பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோர், உடலில் நோய் பாதிப்புகளுடையோருக்கு பூஸ்டர் செலுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம். நேரடியாக மையத்திலேயே பதிவு செய்து கொள்ளும் முறை வருகிற 10ந்தேதி தொடங்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments