நாடு முழுவதும் விரைவில் இ-பாஸ்போர்ட் சேவை

0 15211

நாட்டில் இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தேஜ் பாட்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், அதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார். இ-பாஸ்போர்ட்டானது முற்றிலும் காகிதமில்லா பாஸ்போர்ட்டாக இருக்காது என்று கூறிய அவர்,பாஸ்போர்ட்டில் விரைவில் மின்னணு ‘சிப்’ பொருத்தப்படவுள்ளது என்றார்.

மக்களுக்கு பாஸ்போர்ட் சார்ந்த சேவைகளை இணையவழியில் வழங்குவதற்காக பாஸ்போர்ட் சேவை திட்டத்தை வெளியுறவு அமைச்சகம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments