நடிகை திரிஷா, நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு... திரையுலக நட்சத்திரங்களையும் விடாத கொரோனா

0 5322

நடிகை திரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நடிகை திரிஷா, இந்த வாரம் தனக்கு வேதனை மிகுந்த வாரமாக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக எனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கொரோனா பாதிப்புக்கு ஆளான நடிகர் சத்யராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments