பள்ளிக்கு செல்லாமல் படத்திற்கு சென்ற பள்ளி மாணவர்கள்.. தியேட்டரில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் சிக்கிய மாணவர்கள்.!
கடலூரில் பள்ளிக்கு செல்லாமல் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி, போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் பேருந்து பணிமனை எதிரே உள்ள தியேட்டரில் கொரோனா விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வருவாய்துறையினரும் போலீசாரும் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிலர், பள்ளி சீருடை அணிந்துக் கொண்டு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில், பள்ளிக்கு செல்லாமல் தியேட்டருக்கு வந்தது தெரிய வந்ததையடுத்து, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Comments