ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் - உச்சநீதிமன்றம்
மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தி.மு.கவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நாலாயிரம் மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் பயன் பெறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலமும் அதன் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி 100 விழுக்காடு இடங்களையும் நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வர வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், முதலமைச்சர் கூறியுள்ளார்.
Comments