குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அக்கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு முதலில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து 250 ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் சரவணா ஸ்டோர்ஸ் கடையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Comments