ஐந்து நாட்களில் 1.5 கோடிச் சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
இந்திய மக்கள் தொகையில் தகுதியுள்ள 90 விழுக்காட்டினருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், ஐந்தே நாட்களில் சிறார்கள் ஒன்றரைக் கோடிப் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசியப் புற்றுநோய் மையத்தின் இரண்டாவது வளாகத்தைக் காணொலியில் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கிழக்கு இந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் மருத்துவத் திறன் இதன்மூலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டில் 150 கோடி டோஸ்களுக்கும் மேலாகத் தடுப்பூசி போட்டுப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இதன்மூலம் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
Comments